விதிமுறைகள்

விதிமுறைகள்

1 ) படைப்புக்கள் அனைத்தும் (முழு நீளத்திரைபடம் தவிர) 01-01-2014 தொடக்கம் 31-12-2015 காலப்பகுதிக்குள் ஏதாவதொரு சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும்.

2) ஐரோப்பாவில் இருந்து வெளிவந்த படைபுக்களாக இருக்க வேண்டும். அல்லது வேறு நாடுகளில் இருந்து வெளிவந்த படைப்புக்களாக இருப்பின், அந்த படைப்பில் ஐரோப்பாவை சேர்ந்த 3 படைப்பாளிகள் அந்த படைப்பில் பணியாற்றி இருக்க வேண்டும். ( தமிழ் மொழியை அடிப்படையாக கொண்ட படைப்புக்களாக இருக்க வேண்டும்)

3) அவ்வாறு 3 படைப்பாளிகள் பணியாற்றி இருப்பின் அந்த பிரிவில் மட்டுமே அந்த படைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு பரிந்துரைக்கப்படும்.

4) படைப்புக்கள் அனைத்தும், குறும் திரைப்படங்கள், பாடல்கள் (வீடியோ) ,முழு நீளத்திரைப்படங்கள் என வகைப்படுத்தப்படும். குறுந்திரப்படங்கள் 01 நிமிடம் தொடங்கி 47 நிமிடங்களுக்குள் காணப்பட வேண்டும். ( முழு நீளத்திரைப்படங்களில் வெளிவந்த பாடல்கள் காணொளிப் பாடல் பிரிவில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டாது )

5) எமது saathanaithamizha.com எனும் இணயத்தில் காணப்படாத படைப்புக்களை , குறிப்பிட்ட (April 20) காலப்பகுதிக்குள் saathanaithamizha.com இணயத்தில் கணப்படும் Sumbit எனும் பகுதியி ஊடக அனுப்பி வைக்க வேண்டும்.

6) ஒவொரு பிரிவுகளிலும் தலா 6 பேர் எமது நடுவர்கள் தெரிவு செய்து, மக்களின் வாக்களிப்புக்கு விடப்படும், அக் குறிப்பிட்ட காலப்பகுதியில் பெறப்படும் வாக்குகளின் அடிப்படையிலும், நடுவர்களின் தெரிவின் அடிபடையிலும் வெற்றியாளர் தெரிவு செய்யப்படுவார்.

7) July16. 2016 ,Swiss இல் நடைபெறும் சாதனைத்தமிழா மேடையில் விருதுகள் வழங்கப்படும்.

8) வாழ்நாள் சாதனையாளர் விருது , நகைச்சுவை திலகம் K.S பாலச்சந்தர் விருது , இயக்குனர் பாலுமகேந்திரா விருது என்பவற்றை பெறுவோர் நேரடியாக சாதனைத்தமிழா ஏற்பாட்டாளர்களினால் தெரிவுசெய்யப்பட்டு கெளரவிக்கப்படுவர்.